அன்புள்ள கடிதம்,
"சித்ரா......." என்று அம்மா உரத்த குரலில் அழைத்தாள். "இதோ வருகிறேன்" என்று சொல்லி கொண்டே அருகில் சென்றேன். அவள் கைகளில் சில காகிதங்கள் தென்பட்டன. "இது உங்க அப்பா எனக்கு முதல் முதலில் எழுதிய கடிதம்" "இதெல்லாம் உன் தாத்தா எனக்கு கல்யாணத்துக்கு அப்புறம் எழுதினது" என்று சொல்லிய பொழுது குரலில் ஒரு உற்சாகம் முகத்தில் ஒரு பொலிவு கண்களில் ஒரு வித ஆனந்தத்துடன் காட்சி அளித்தாள். அக் கடிதத்தை கையில் வாங்கிகொண்டு படிக்கத் துவங்கிய பொழுது ஒரு புது வித அனுபவம் ஏற்பட்டது. அப்பொழுது தான் புரிந்தது அம்மாவின் புலன்களில் தென்பட்ட மாற்றத்தின் அர்த்தம்.
ஒவ்வொரு கடிதத்திற்கும் ஒரு வித உயிர் இருக்கிறது அதன் உரிமையாளர் மட்டும் அல்லாமல் அவரை சார்ந்தவர்களாலும் அதை உணர முடிகிறது. இந்த உணர்வுகள் இக்காலத்தில் இருக்கும் emailகளுக்கோ smsகளுக்கோ (h r u, swthrt, lol, gn tc, k, s, y, ilu) இருகிறதா என்பது பெரிய கேள்வி குறிதான்.?
ஒரு கடிதத்திருக்கு இருக்கும் உணர்வுகள் பல வர்ணங்கள் உடையது. ஒரு தாயின் அன்பு, காதல், சகோதர பாசம், நட்பு, கசப்பான அனுபவங்கள், துயர் சம்பவங்கள், இன்ப நிகழ்வுகள் என்று அடிக்கிக் கொண்டே போகலாம். இது மட்டும் அல்லாமல், எத்தனை போன்ட்ஸ் (fonts) இருந்தாலும், நம்மோடு நெருங்கியவர்களுடைய கை எழுத்தில் சமாச்சாரம் படிக்கும் சுவைக்கு ஈடாகது.
கடிதம் எழுதுபவர் சிந்தனையை ஒருமைப் படுத்தி எண்ணங்களின் பிரதிபலிப்பாய் வார்த்தைகளுக்கு உருவமளித்து எழுதுவதால் அதற்க்கு ஒரு உயிர் உருவாகிறது. கடிதம் எப்பொழுது வருமோ என்று காத்திருத்தல், கையில் கிடைத்தவுடன் பிரிப்பதற்குள் ஏற்படும் தவிப்பு, அதை படிக்கும் பொழுது ஏற்படும் துடிதுடிப்பு, எழுதியவரின் மனநிலை புரிதல், பிற்காலத்தில் திருப்பிப் படிக்கும் பொழுது ஏற்படும் உற்சாகம், அந்த நினைவுகள் உயிர்தெழுவதின் மகிமை இவை அனைத்தும் வெறும் வார்த்தைகளால் புரிபடுவதல்ல.
இப்படிக்கு,
உன் உன்னதம் புரிந்த
ஆனால் அதை உணரமுடியாத ஏக்கத்துடன்
சித்ரா.எஸ்
Nice thoughts!
ReplyDeleteCorrecta சொன்ன சித்ரா.. அக்காலத்தில் வார்த்தைகள் சில, உணர்வுகள் பல, இக்காலத்தில் நேரங்கள் போலவே வார்த்தைகளும் அவ்வார்த்தைகள் பின்னால் இருக்கும் உணர்வுகளும் சுருங்கின...
மேலும் தமிழில் ப்ளாக் எழுத என் வாழ்த்துக்கள்!
மிக அருமையாக சொன்னாய்.. மிக்க நன்றி..
ReplyDeleteநான் படித்த கடிதங்களிலேயே மிக அருமையானது உன் படைப்பு :-)
ReplyDelete