Wednesday 13 June 2012

Priority Change and Acceptance


Scene 1 – Shankar (his room), His Mother (kitchen), His Father (drawing room)

ஷங்கர் எத்தனவாட்டி சாப்பிட கூப்படணும் அப்படி என்னதான் அந்த Mobile lஇருக்கோ

வரேன் மா அவளோடதான் பேசிண்டு இருந்தேன்

(Shankar goes to the Kitchen)

இது ஒண்ணு இப்போ புதுசா சொல்ல ஆரம்பிச்சிருக்கஎன்னதான் மணிக்கணக்கா பேசுவேளோஅந்த காலத்துலஉங்க அப்பாவும் நானும்...

சரி அந்த புராணத்த இப்போ ஆரம்பிக்காத இதையே அலுக்காம எப்படி சொல்ல முடியறது ..?  We are all Gent Next you see.

என்ன கண்றாவியோ எனக்கு சரியா படல அவ்வளவுதான் 

என்ன Mummy பிரச்சன உனக்கு சொல்லு..?

நானும் பத்துநாளா அந்த அடுப்பு வாங்க போகணும்னு சொல்லிண்டே இருக்கேன் உனக்கு அத தவிர எல்லாஇடத்துக்கும் போகமுடியறது 

தப்புதான் அவளோட கொஞ்சம் busya இருந்துட்டேன் நாளைக்கு கண்டிப்பா போகலாம் 

நா அவளோட போகறத  பத்தி சொல்லவரல ஆனா அதுக்காக வேற எதுவுமே பண்ண மாட்டேன்னா  எப்படி ?

சரி நாளைக்கு போலாம்னு சொல்லிட்டேன்ல 

உடனே உனக்கு கோவம் வந்துடுமே இப்போவே இப்படினா hmmm சரி இத விடு உங்க அப்பா ஏதோ பேசணும்னு சொன்னா என்னனு போய் கேளு 

(Shankar goes to the Drawing Room) 

அப்பா ஏதோ பேசணும்னு சொன்னியாமே என்ன விஷயம் 

பரவா இல்லையே உனக்கு என்னோட கூடபேச டைம் இருக்கே 

matter ku வரயா..?

நேத்திக்கி உன் தங்கை ரொம்ப வருத்த பட்டா 

ஏன் என்ன ஆச்சு ?

நேத்திக்கி மத்யான்னம் அவ என்னோவோ முக்கியமா சொல்லிண்டு இருந்தாளாம் உன் advice கேட்டுருக்கா போலஇருக்கு ஆனா நீ ஏனோ தானோன்னு பதில் சொல்லிருக்க 

அதெல்லாம் ஒண்ணும் இல்ல நா ஏதோ பண்ணிண்டு இருந்தேன் அப்படியும் அவ சொன்னத கேட்டேனே

தெரியும் busy ah video chat பண்ணிண்டு  இருந்த அதுனால இது purely நீ decide பண்ண வேண்டியது i got nothing to say ன்னு பட்டும்  படாததுமா பதில் சொல்லிட்டன்னு  சொன்னா

hmm இப்போ புரியறது  சரி  நா அவளோட பேசறேன். By the way now I got to go out. Bye ma Bye Pa. 

Shankar’s Mind Voice
Same reply நா சில times குடுத்திருக்கேன் but இப்போ நா என்ன பண்ணினாலும் இவள ignore பண்ணறேன் Swathi ku தான் importance குடுக்கறேன்னு தோணறது. It is not just for her, for everybody. So should handle them with care.

(Shankar flicks the bike key and leaves home)

(Mother walks to the Drawing Room)

என்னதான் சொல்லுங்கோ நம்ம புள்ள சமத்து

இல்லையா பின்ன.. என்ன இந்த கட்டத்துல இப்படி தான் இருப்பான்

என்ன கொஞ்சம் தள்ளி போயிட்டானோனு தோணறது 

இத பாரு நீ 27 வருஷத்துக்கு முன்னாடி நா எப்படி இருக்கணும்னு நினைச்சியோ அதேதானே உன் புள்ளைக்கு இன்னிக்கி 

அது சரிதான் இந்த காலத்துல இருக்கற பசங்களுக்கு இவனா பாத்துக்காம நம்ம சொன்னபடி கேட்டதே சந்தோஷம்

அவளும் நல்ல மாதிரி மரியாதை தெரிஞ்ச பொண்ணா தான் தெரியறா கவலை பட ஒண்ணும் இல்ல

சரிதான் ஏதோ ரெண்டு பேரும் சந்தோஷமா நன்னா இருந்தா அதுவே போரும்

***************************************************************************


Scene 2 - Swathi (her room), Her Mother (kitchen), Her Father (drawing room)

சுவாதி எத்தனவாட்டி சாப்பிட கூப்படணும் அப்படி என்னதான் அந்த Mobile la இருக்கோ

வரேன் மா அவனோடதான் பேசிண்டு இருந்தேன்

(Swathi goes to the Kitchen) 

அவனோடயா..! (கழுத்துல கத்திய வெச்சா மாதிரி ஒரு அதிர்ச்சில அம்மா கேட்டாஎன்ன மரியாதை இல்லாமசொல்லற.? அந்த காலத்துல உங்க அப்பாவ நான்...

சரி அந்த புராணத்த இப்போ ஆரம்பிக்காத இதையே அலுக்காம எப்படி சொல்ல முடியற்து..? We are all Gent Next you see.

என்ன கண்றாவியோ எனக்கு சரியா  படல அவ்வளவுதான் 

என்ன Mummy பிரச்சன உனக்கு சொல்லு..?

என்னதான் இருந்தாலும் வெளி மனுஷா எதிர்கவாவது மரியாதையா நடந்துக்கோ.. அப்புறம்  என்ன அதிசயமா இன்னிக்கி Newspaper படிச்ச  

அதுவா படிக்க ஆரம்பின்னு he told அதான்
(தமிழ் அவர்/அவன் சொல்லி திட்டு வாங்கறதுக்கு இங்கிலீஷ் he better) 

நா எத்தன வருஷமா சொல்லின்டே இருந்தேன் ஒரு நாளாவது கேட்டிருப்பியா எல்லாம் சொல்ல வேண்டியவா சொன்னா தான் ஏறர்து  

அதுனால என்ன எப்படியோ படிக்க ஆரம்பிச்சுடேன்ல 

உடனே உனக்கு கோவம் வந்துடுமே இப்போவே இப்படினா hmmm சரி இத விடு உங்க அப்பா ஏதோ பேசணும்னு சொன்னா என்னனு போய் கேளு  

(Swathi goes to the Drawing Room) 

அப்பா ஏதோ பேசணும்னு சொன்னியாமே என்ன விஷயம் 

பரவால்லையே உனக்கு என்னோட கூடபேச டைம் இருக்கே 

matter ku வரயா..?

இந்த weekend நானும் அம்மாவும் குலதெய்வம் கோவிலுக்கு போகலாம்னு இருக்கோம் நீயும் வரயா.?

mmm எப்படியும் எனக்கு தான் வேற குலதெய்வம் ஆயிடுதுல்ல so நீங்க போயிட்டு வாங்கோ 

அடிப்பாவி loyalty total ah shift ஆகிடுத்து nu தெரியும் அது எனக்கு மட்டும்தான்னு நினைச்சேன் கடவுளுக்குமா..?

Sorry pa நா ஒரு joke ah சொன்னேன். உடனே over-reaction குடுக்காத நிஜமா எனக்கு வேலை இருக்கு நீங்க போயிட்டு வாங்கோ. By the way now I got to go out. Bye ma Bye Pa. 

Swathi’s Mind Voice
Reminded of “Abhiyum Naanum” film. Appa is already feeling he is no more my best friend and that I am going away from him. It is not just for him, for everybody. So should handle them with care.

(Swathi takes her bag and leaves home)

(Father walks to the Kitchen)

என்னதான் சொல்லு நம்ம பொண்ணு சமத்து

இல்லையா பின்ன.. என்ன இந்த கட்டத்துல இப்படி தான் இருப்பா 

கொஞ்சம் என்ன விட்டு விலகி போயிட்டாளோன்னு தோணறது  

இத பாருங்கோ நீங்க 25 வருஷத்துக்கு முன்னாடி நா எப்படி உங்க குடும்பத்துல இருக்கணும்னு நினைச்சேளோ அதேதானே இப்போ அவளுக்கும் 

அது சரிதான் இந்த காலத்துல இருக்கற பொண்ணுங்களுக்கு இவளா பாத்துக்காம நம்ம சொன்னபடி கேட்டதேசந்தோஷம்

அவனும் நல்ல மாதிரி அனுசரிச்சு இருப்பவனா தான் தெரியறான் கவலை பட ஒண்ணும் இல்ல

சரிதான் ஏதோ ரெண்டு பேரும் சந்தோஷமா நன்னா இருந்தா அதுவே போரும்

-------------------------------------------Curtains Down-------------------------------------------