Wednesday 30 November 2011

நுண் நோக்கலும் பூதாகர பார்வையும்

*******************************************************************************************
வாழ்கையில் உள்ளது பல நிகழ்வுகள்
அதற்குப் போதுமான முக்கியத்துவம் கொடுங்கள்
இதை நிர்ணயிக்க வேண்டும் இரு கண்ணோட்டங்கள்
அதை என்னால் முடிந்தவரையில் விளக்குகிறேன் கேளுங்கள்

நுண் நோக்கல் ஒன்று
பூதாகர பார்வை மற்றொன்று
முதலில் இவ்விரண்டையும் புரிதல் நன்று
பின்னர் மகிமை அறிவாய் வாழ்க்கையில் வென்று
*******************************************************************************************
சிறிய பொருள் தொலைந்தால், கூச்சல் போடுவது
மதிப்பெண் குறைந்தால், வருந்தி அழுவது
சிறு ஏமாற்றம் அடைந்தால், மனம் குமுறுவது
வீம்புக்கு பேசியதால், நம்மளை வருத்திப்பது

என மிகைபடுத்தல் நெடுங்காலத்திற்கு பயன்படாது
எனவே பூதக் கண்ணாடியால் பார்க்காமல்
இதை எப்படி தவிர்ப்பது, அடுத்து என்ன செய்வது
என்று துல்லியமாய் நோக்குங்கள்
*******************************************************************************************
இவர்களை நாளை பார்த்துப் பேசலாம்
அந்த இடத்திற்கு பின்னர் போகலாம்
இதை பற்றி பின்பு யோசிக்கலாம்
அதை பிறகு கற்றுக்கொள்ளலாம்

இவை சிறிய சம்பவமாய் தென்பட்டாலும்
பிற்காலத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம்
விளைவு புரிந்து நுணுக்கங்களை பெருக்கிப் பார்த்தால்
காலம் தாழ்த்தி  வருந்தாமல் வேண்டியபலன் அடையலாம்
*******************************************************************************************

No comments:

Post a Comment